விருதுநகரில் சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர், நவ. 1: புதிய சொத்துவரி உயர்வை திரும்ப பெறக்கோரியும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டமும், மனு கொடுக்கும் போராட்டமும் நடைபெற்றது. விருதுநகர் நகராட்சியில் சொத்துவரி மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழைய சொத்து வரி விதிப்பில் வீடுகளை ‘ஏபிசிடி’ என 4 கிரேடுகளாக பிரித்து, டி கிரேடுக்கு ரூ.60 பைசா சதுர அடிக்கு வரி வசூலித்து வந்தனர். தற்போது டி கிரேடு நீக்கப்பட்டுள்ளது. சி கிரேடுக்கு 0.90 பைசா வரிக்கு பதிலாக சதுர அடிக்கு ரூ.2.50 வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, புதிய சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடந்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி, நகராட்சி ஆணையரிடம் நேற்று மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர குழு  உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார். நகர குழு உறுப்பினர் தேனி வசந்தன்  ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: