விவசாயிகள் மாட்டு வண்டியுடன் வந்து ஆர்ப்பாட்டம் உலக சிக்கன நாளையொட்டி

செய்யாறு, அக்.31: உலக சிக்கன நாளையொட்டி செய்யாறில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உலக சிக்கன நாளையொட்டி செய்யாறு வேளாண்மை விரிவாக்க மையம் எதிரில் நேற்று விவசாயிகள் மாட்டு வண்டியுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெட்ரோல், டீசல், காஸ், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்கவும், உழவு மாடுகளுக்கு வேளாண் துறை மூலம் ₹200 மானியம் வழங்கவும், தெளிப்பு நீர் பாசனம் வழங்கவும், பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க சைக்கிளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மின்சிக்கனத்தை குறைக்க எல்இடி பல்புகள் 50 சதவிதம் மானியத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டுவண்டி, சைக்கிள், எல்இடி பல்புகள் போன்றவற்றை கொண்டு வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: