தனியார் திருமண மண்டபம் எதிரே குப்பை தொட்டி வைப்பு துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் எதிர்ப்பு சொத்துவரி மற்றும் குழாய் வரி கட்டாததால்

ஆற்காடு, அக்.31: சொத்துவரி மற்றும் குழாய் வரி கட்டாததால் தனியார் திருமண மண்டபம் எதிரே துப்புரவு பணியாளர்கள் குப்பை தொட்டி ைவத்து குப்பை கொட்டினர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆற்காடு நகராட்சி அண்ணாசாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. ஆற்காடு நகராட்சிக்கு 2017-18, 2018-19 ஆகிய நிதியாண்டில் ₹1.85 லட்சம் தொழில்வரி மற்றும் குடிநீர் வரி கட்டவில்லையாம்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண மண்டபம் எதிரில் நகராட்சி குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அந்த தொட்டியில் போட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை குப்பைத் தொட்டிக்கு அருகில் திருமண மண்டபம் எதிரில் குப்பை கொட்டிய நிலையில் இருந்தது.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் கூறியதின் பேரில் திமுக, அதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அங்கு சென்றனர்.பின்னர் நகராட்சி அலுவலகம் சென்று ஆணையாளர் ஷா.ஷகிலாவிடம் இதுகுறித்து முறையிட்டனர். இதையடுத்து அவர் திருமண மண்டபம் எதிரில் கொட்டிய நிலையில் இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

Related Stories: