மக்களுடனான பயணம் கமல் நாளை சேலம் வருகை

சேலம், அக்.11: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்களிடம் கலந்துரையாட நாளை நடிகர் கமல் வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாவட்டம் வாரியாக மக்களுடனான பயணம் என்ற தலைப்பில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதையொட்டி, நாளை (12ம் தேதி) அவர் சேலம் வருகிறார். 12, 13ம் தேதிகளில் சேலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து பேசும் அவர், 14ம் தேதி நாமக்கல் செல்கிறார். முன்னதாக 13ம் தேதி இரவு 7 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: