மத்திய அரசு பல்கலைக் கழக மானியக்குழு கலைப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, அக்.11: மத்திய அரசு பல்கலைக் கழக மானிய குழுவினை கலைக்கப்படுவது கண்டித்து மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிற் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்கள் அனைவருக்கும் உடனே இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட முன் வரைவை திரும்பபெற வேண்டும், மேன்மைதகு பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் அம்பானியின் ஜியோ பல்கலைக் கழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தை வாரி வழங்குவதை கைவிட வேண்டும். இந்திய மருத்துவ குழுவினை கலைத்து விட்டு மருத்துவ ஆணையத்தை உருவாக்கி மருத்துவ படிப்பிற்கு நீட் மற்றும் எக்ஸ்சிட் தேர்வுகளை கட்டாய மாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், பாலமுருகன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி முன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் நல்லசுகம், மாவட்டக்குழு வினித், சுமித், ஹரிஹரன், ஜெனிபர், சம்பத், ஸ்டாலின், வினோத், மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: