9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு தர்ணா

பெரம்பலூர், அக். 11:  உயர்  நீதிமன்ற தீர்ப்புக்ேகற்ப ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின்கீழ்  இணைக்கக்கூடாது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூரில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். உயர்  நீதிமன்ற தீர்ப்புக்ேகற்ப ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின்கீழ்  இணைக்கக்கூடாது. 8வது ஊதியக்குழுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 21 மாத  நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத்தலைவர் மாயவேலு வரவேற்றார். கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணசாமி, தங்கராஜ், பத்மநாபன், தமிழ்ச்செல்வன், நீலமேகம், மகேஸ்வரன், ஆளவந்தார், ராஜேந்திரன், முத்துசாமி, கருணாநிதி, ராமர், சம்பத் முன்னிலை வகித்தனர். தர்ணா போராட்டத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட செயலாளர் அகஸ்டின் துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் முருகேசன் பேசினார். மாவட்ட பொருளாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

Related Stories: