வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்க தயார் நிலையில் நெடுஞ்சாலை துறை

கோத்தகிரி,அக்.7: நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பேரிடர்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை பாதிப்பு மண்சரிவை தடுக்க ஆயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 மேலும் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் மரங்களை அறுக்கும் மின்சார வாள்கள், மண் வெட்டி, கடப்பாறைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் ஜே.சி.பி. இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முழுவதும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் சாலை பணியாளர்கள் உதவியுடன் அனைத்து சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை சீரமைத்தனர்.

 இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்ரமணி கூறியதாவது: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உதவி பொறியாளர் பாலமுரளி மேற்பார்வையில் 6 சாலை மேற்பார்வையாளர்கள், 20 சாலை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். முக்கிய இடங்கிளல் ஜே.சி.பி. இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: