உலக விண்வெளி வார விழா கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

ஊட்டி,செப்.25: மாவட்ட நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருெநல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விண்வௌி சுற்றுலா என்ற தலைப்பிலும், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு என்ற தலைப்பிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதலாம். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவர்களின் கையெழுத்தில் 2 ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இந்த கட்டுரை தங்களால் தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமையாசிரியரின் ஒப்புதல் இணைக்கப்பட வேண்டும்.

வரும் 1ம் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

Related Stories: