தமிழகம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்துக்கள் தொடர்பான முழு பட்டியல் எடுக்க உத்தரவு 2020க்குள் 50 சதவீத விபத்து குறைக்கவும் அறிவுறுத்தல்

வேலூர், செப்.12: தமிழகம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்து விவரங்களின் முழு பட்டியல் எடுக்கவும், வரும் 2020க்குள் 50 சதவீத விபத்துக்களை குறைக்கவும் மாவட்ட எஸ்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.உலகில் அதிகளவில் விபத்துக்கள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்கள் மூலம் விபத்தில் அதிகப்படியான மக்கள் பலியாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அதேபோல் மாநிலங்களில் சாலை விபத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. கொலையை விட கொடூரமான ஒன்றாக சாலை விபத்துக்கள் கருதப்படுகிறது. மேலும் தேசிய அளவில் பெரிய அளவிலான பிரச்னையாக சாலை விபத்து இருப்பதால், தேசிய அளவிலான சாலை பாதுகாப்பு குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் விபத்துக்களை கண்காணித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டை விட தற்போது விபத்துக்கள் சற்று குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்துக்களில், விபத்து எப்படி நடந்தது?, விபத்திற்கான காரணம் என்ன? விபத்து நடந்த இடம் எது? என்று பட்டியல் தயாரித்து அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் வரும் 2020ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். இதற்காக விபத்துக்கள் குறித்து பேராசிரியர்களுடன் ஆய்வு நடத்தி மாவட்டம்தோறும் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு குறித்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: