மாவட்டம் முழுவதும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி, செப்.11:  பெட்ேரால், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து எதிர்கட்சிகள் நாடு தழவிய பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. மேலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இதில் இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், நகர காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். நகர துணை தலைவர் அண்ணாமலை, மாநில கூடுதல் தலைமை அமைப்பாளர் பாண்டு, மாவட்ட செயலாளர் தமிழரசன், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் தனசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஓமலூர்: ஓமலூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, செல்வகுமரன், ராஜ அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பார்த்திபன், ஆறுமுகம், சாமுராய் குரு உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை பாதியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினரும், ஓமலூர் நகர் முழுக்க கண்டன பேரணி நடத்தினர். பந்தை முன்னிட்டு, ஓமலூர் வட்டாரத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.வாழப்பாடி: சேலம் கிழக்கு மாவட்ட திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நேற்று வாழப்பாடியில் டூவீலரை பாடையில் கட்டி வைத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை தாங்கினார். வாழப்பாடி ராமசுகந்தன், ஏற்காடு முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்சினி, திமுக ஒன்றிய செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், விஜயகுமார், வென்னி சேகர், சக்கரவர்த்தி, காங். மாவட்ட துணை தலைவர்கள் ராஜா, முனுசாமி, சதிஸ்குமார், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், வாழப்பாடி நகரச் செயலாளர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் செந்தில் முருகமணி, மகேஷ், வட்டாரத் தலைவர் ராஜாராம், பிரிவு அணி பாலா, ஆனந்த், பிரிவு அணி மாவட்ட தலைவர் செந்நிலவன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், குறிச்சி பெரியசாமி, வாழப்பாடி நகரத் தலைவர் ரவிமணி, பிரபாகரன், தமிழக வாழப்பாடியார் விவசாயிகள் சங்க நகரத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேட்டூர்:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குஞ்சாண்டியூர் பஸ் ஸ்டாப்பில், காங்கிரஸ் வட்டார தலைவர் ஐய்யணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ேகாரியும், மத்திய அரசை கண்டித்தும் ேகாஷமிட்டனர். காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கூளையூர் சேகர், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். மேட்டூரில், வட்டார காங்கிரஸ் தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் மாவட்ட நிர்வாகி மெய்யழகன், சிவக்குமார், நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், காலி சிலிண்டர்கள், விறகு கட்டைகள் ஆகியவற்றுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தை, ஸ்ட்ரெக்சரில் வைத்து தூக்கி சென்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொளத்தூர், மேட்டூர், குஞ்சாண்டியூர், மேச்சேரி, நங்கவள்ளி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் இருந்து மேட்டூர் பாலாறு வழியாக, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூர் செல்லும் 18 பஸ்களும், கர்நாடகாவில் இருந்து பாலாறு வழியாக மேட்டூர், ஈரோடு, சேலம் வந்து செல்லும் கர்நாடக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் அமாவாசை தினமான ேநற்று முன்தினம், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

    கெங்கவல்லி: கெங்கவல்லியில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், பேரூர் செயலாளர் ஷேக் மொய்தீன், கெங்கவல்லி காங்கிரஸ் தலைவர் வையாபுரி, பிரமுகர் சிவாஜி, முருகானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் விடுதலை சிறுத்தை கட்சி, கொங்கு நாடு மக்கள் முன்னேற்ற கட்சி, இந்திய கம்யூனிசிஸ்ட் கட்சி, சோஷயல் டெ்மாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சேர்ந்த தொகுதி தலைவர் முஹம்மது ஜியாவுல் ஹக், துணை தலைவர் அப்துல் நசீர், திமுக பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி வினோத் மற்றும் கெங்கவல்லி காங்கிரஸ் தொகுதி தலைவர் முருகானந்தம் மற்றும் அனைத்து கட்சியினர் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்.

Related Stories: