பொதுமக்கள் அதிருப்தி

சாத்தூர், செப். 11: சாத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு செல்லும் ரோட்டில், போத்திரெட்டிபட்டி விலக்கு அருகே, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான அட்டை மில் உள்ளது. இந்த மில்லில், பேப்பர் கழிவுகளை அரைத்து அட்டை தயாரித்து வருகின்றனர். இதற்காக பேப்பர் கழிவுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து,

மில் வளாகத்தில் இருப்பு வைத்துள்ளனர். நேற்று காலை வழக்கம்போல, இயந்திரத்தில் அரைப்பதற்காக ஜேசிபி மூலம், பேப்பர் கழிவுகளை அள்ளும்போது, திடீரென பேப்பர் கழிவுகளில் தீப்பற்றியது.உடனே மில்லில் இருந்தவர்கள், அங்கிருந்த நவீன தீ தடுப்பு சாதனங்கள் மூலம், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மில் ஊழியர்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். தீயை விரைவாக அணைத்ததால், பல லட்சம் மதிப்பிலான பேப்பர் கழிவுகள் தப்பின.

Related Stories: