பெ.நா.பாளையம் அருகே வனப்பகுதியில் மணல் திருட்டு 3 பேருக்கு அபராதம்

பெ.நா.பாளையம்:  கோவை பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்துக்குட்பட்ட தோலம்பாளையம் கிழக்கு பகுதியான தடாகம் ஒதுக்குகாடு, குழிக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வனத்துறை சார்பில் தோண்டப்பட்டுள்ள யானை தடுப்பு அகழிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அனுமதி பெறாமல் டிராக்டர் மூலம் 3 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். வனத்துறையினர் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரனையில், குழிக்காடு பகுதியை சேர்ந்த மூர்த்தி, கனகராஜ் மற்றும் நாகராஜ் என்பது தெரியவந்தது. வனத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக மாவட்ட வன அலுவலர் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Related Stories: