அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர், செப். 9:  அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர்  விஜயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், கூட்டத்தில் 66 கோரிக்கை மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேசிய அடையாள அட்டை பெற்று தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம் என்றார்.தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) காமாட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: