அரியலூர் மாவட்டத்தில் கல்லூரி வளாக தூதுவர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

அரியலூர், செப். 9:  அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் கல்லூரி வளாக தூதுவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து கலெக்டர் விஜயலட்சுமி   தெரிவித்ததாவது: அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ. மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான கல்லூரி வளாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின்போது வரும் 31.10.2018 முடிய நடைபெறும் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான அனைத்து அடிப்படை தகவல்களும், இன்று, 23ம் தேதி மற்றும் அக்டோபர்  7, 14ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அவரவது கல்லூரியில் மாணவர்கள் ஒருவர் கூட விடுபடாமல் தகுதியானோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் அவசியம், பெயர் சேர்ப்பதற்குரிய படிவம் 6 மற்றும் வயது .இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவணங்கள் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது என்றார்..

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார்கள் சந்திரசேகரன் (தேர்தல் பிரிவு), முத்துலட்சுமி (அரியலூர்) மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: