மரங்கன்றுகள் வழங்கும் விழா 100 நாள் வேலையில் பாரபட்சம்

சிவகாசி, செப். 7: 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிவகாசி யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுழற்சி முறையில் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளையாபுரம் கண்மாய், நீர்வரத்து பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்குவதில் ஊராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக கூறி சிவகாசி யூனியன் அலுவலகத்தை வெள்ளையாபுரம் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும்போது, ஊராட்சி செயலாளரின் உறவினர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து இன்று(நேற்று) வேலைக்கு சென்ற இடத்தில் நாங்கள் தட்டிக்கேட்டோம். இதனால் யாருக்கும் வேலையில்லை என்று கூறி அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். ஏமாற்றமடைந்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். வேலை வாய்ப்பு திட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். எனவே பாரபட்சமின்றி எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: