தொழில்முனைவோர் பயிற்சி முகாம்

திருச்சுழி, செப். 6: திருச்சுழி ஸ்பீச் இளம் தொழிலாளர் மீட்டெடுத்தல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் சார்பில், திருச்சுழி பகுதி இளைஞர்களுக்கு சணல் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை ஸ்பீச் திட்ட இயக்குநர் எர்ஸ்கின் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் செல்வராஜ், சணல் தயாரிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்து சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், குழந்தைகள் உரிமைகள் மீட்டெடுத்தல் திட்டத்தின் சார்பாக நிலைத்த வருமானம் ஈட்டக்கூடிய 30 இளைஞர்களுக்கு இலவசமாக ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

Related Stories: