பார்வர்ட்ல 13 சதவீத படங்கள் போலியானவை...அரசியல் வாட்ஸ்அப் குரூப்ல டுபாக்கூர் படங்களும் சுத்துதாம்...

* அவசரப்பட்டு வார்த்தைய விட்டுறாதீங்க...

* அப்புறம் அட்மினோடு கம்பி எண்ணுவீங்க...

* சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரிடம் உளவியல் ரீதியாக புரிதலை ஏற்படுத்தனும்னு ஆய்வாளர்கள் சொல்லிட்டாங்க

புதுடில்லி: வாட்ஸ் அப் வந்தாலும் வந்தது... ஒவ்வொருத்தரும் அட்மின் ஆகி குரூப் ஒண்ணை ஆரம்பிச்சு அறிந்த பேர், அறியாத பேரை எல்லாம் சேர்ப்பாங்க... கடைசியில ஒருத்தர் போடுற படத்தால, ‘பதிவுப்போர்’ துவங்கி பெரிய பஞ்சாயத்தை கூட்டிருவாங்க... கடையில பார்த்தா ஒரிஜினல் படத்தை போட்டோஷாப்ல மாத்தி போட்டிருப்பாங்க... இது தெரியறதுக்குள்ள நம்ம பரம்பரையே திட்டி தீர்த்திருப்பாங்க... அந்த வகையில இந்திய அரசியல் வாட்ஸ் அப் குழுக்களில், 13 சதவீத படங்கள் போலியானவை என தெரிய வந்திருக்காம்... ஆச்சரியமா இருக்கு இல்லை... இனிமேலயாவது பார்த்து ‘பார்வர்ட்’ பண்ணுங்க பாஸ்... சில நேரம் தவறான படங்கள் பார்வர்ட் ஆனா, அட்மினோடு சேர்த்து பகிர்ந்தவரையும் கம்பி எண்ண விட்டுருவாங்க...! சரி... இதை யாரு கண்டுபிடிச்சான்னு கேட்குறீங்களா?

அமெரிக்காவிலுள்ள எம்ஐடி என்ற ஆராய்ச்சி நிறுவனத்தினர் இந்தியாவுல ஒரு ஆய்வு நடத்திருக்கு... அதுல நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அரசியல் தொடர்பான வாட்ஸ் அப் குழுக்களை ஆராய்ஞ்சிருக்காங்க... இதுல பகிரப்பட்ட ஆயிரக்கணக்கான படங்களை சேகரிச்சாங்களாம்... இதுல எட்டுல ஒண்ணு டுபாக்கூர் படமாம். அதுமட்டுமில்லைங்க... இவங்க நேரடியாக இணைக்கப்பட்டவங்க இல்லையாம்... தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 5 ஆயிரம் வாட்ஸப் குரூப்களில் இவங்க நுழைஞ்சாங்களாம்... அக்.2018 முதல் ஜூன் 2019 வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 2.50 லட்சம் பேர் 50 லட்சம் தகவல்களை பகிர்ந்துருக்காங்க...

இதுல 35% புகைப்படங்கள், 17 சதவீத வீடியோக்கள். இது நிஜமா, பொய்யான்னு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செஞ்சிருக்காங்க... அப்பத்தான் 13 சதவீத படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்ட மேட்டரே தெரிஞ்சிருக்கு... இதுல 30 சதவீதம் மீம்ஸ்கள் வேற.. 10 சதவீத புகைப்படங்களை போட்டோ ஷாப் முறையில மாத்தியிருக்காங்க... தொழில்நுட்பங்கள் மாறினாலும், இதையெல்லாம் யாராலுமே தடுக்க முடியாததுதான்... ஒரு நாளைக்கு குட்மார்னிங், குட் நைட் வரை லட்சக்கணக்கான படங்கள் பார்வர்டு ஆகி போய்க்கிட்டே இருக்கு... இதுல ஒரிஜினல் எது? டூப்ளிகேட் எதுன்னு எப்படி கண்டுபிடிக்க முடியும். வாட்ஸப் தொழில்நுட்ப குழுதானே இதை சரி செய்யணும்...

இனிமேலாவது, சரியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பகிர்ந்திடும் வகையில், சமூக வலைத்தளங்களை கொஞ்சம் மாத்தி அமைக்கணும்... இதுக்காக ஒரு சாப்ட்வேரை தயார் செய்யணும்.. அந்த சாப்ட்வேர் டுபாக்கூர் படங்களை தவிர்க்கனும்ணு எம்ஐடி நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாம்... மேலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரிடம் உளவியல் ரீதியாக புரிதலை ஏற்படுத்தனும்னு ஆய்வாளர்கள் சொல்லிட்டாங்க. இதை யாராவது வாட்ஸ் அப் கம்பெனி குரூப்புக்கு முதல்ல பார்வர்ட் பண்ணுங்க... அப்பத்தான் பல பஞ்சாயத்துகளை பைசல் பண்ண முடியும்.

Related Stories: