பாஜக ஆட்சியில் எந்தக் கலவரமும் நடைபெறவில்லை...உ.பி. தான் இந்தியாவின் முன்மாதிரி: முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் எந்த கலவரமும் நடைபெறவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 321 இடங்களை பிடித்து பாஜக ஆட்சியை பிடித்தது. ஆன்மீகவாதியான யோகி ஆதித்யாநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, பாஜகவின் ஆட்சி குறித்து யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தை பற்றிய தவறான கருத்து மாறியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித கலவரங்களும் ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் தான் பாதுகாப்பான மாநிலங்களுக்கான முன்மாதிரி என்றும் முதல்வர் யோகி புகழ்ந்துள்ளார். உத்தரப்பிரதேச சதப்னா திஸ்வாஸ் விழாவை(உபி உதய தினம்) 68 வருடங்களில் முதல்முறையாக 2018ம் ஆண்டு பாஜக ஆட்சியில் மிக சிறப்பாக கொண்டாடியதாகவும் யோகி ஆதித்யாநாத் பெருமிதும் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் இரண்டு ஆண்டுகால சாதனை பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: