ஆலந்தூரில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை ஒடிசாவில் பதுங்கிய 4 பேர் கைது : 50 சவரன் நகை பறிமுதல்

ஆலந்தூர்:  ஆலந்தூர் அடுத்த மணப்பாக்கம் நவீன் கார்டன் தெருவை சேர்ந்தவர்கள் சபரிராஜன், சுதா வெங்கட்ராமன். இருவரும் அருகருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கோடை விடுமுறையின்போது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது, சபரிராஜன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகைகள், சுதா வெங்கட்ராமன் வீட்டை உடைத்து 32 பவுன் நகைகளை நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சங்ராம் (36), லட்மண்தாஸ் (39), ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வம் (59) ஆகியோர் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இந்நிலையில், கொள்ளையர்கள் ஒடிசாவில் பதுங்கியிருப்பதாக கடந்த 3 தினங்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் ஒடிசா சென்று 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கைதான மூவரும் மணப்பாக்கம் வந்து வாடகை வீடு எடுத்து தங்கி, திருமண நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். இதுபோல் பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 50 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: