தகவல் பலகை

ரத்தத்தின் உணவு, தண்ணீர், பிராணவாயுவை திசுக்களுக்கு எடுத்து செல்கிறது. கழிவுப்பொருட்களை கழிவு நீக்கும் உறுப்புகளுக்கு எடுத்து செல்கிறது. நோய்க்கிருமிகளை எதிர்க்கிறது. சுரப்பிகள் சுரப்பு மற்றும் என்சைம்களை விநியோகிக்கிறது. உடல் முழுமைக்கும் ஒரேவிதமான வெப்பத்தை தருகிறது. எங்காவது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உறைவதின் மூலம் ரத்தஇழப்பை தடுக்கும்.இவ்வாறு ரத்தம் பல்வேறு செயல்பாடுகளை செய்து உடலை காத்து வருகிறது.

ஒருவர் நோயுற்றோ, விபத்திற்கு உள்ளாகியோ மிகுந்த ரத்தச்சேதம் ஏற்பட்டு விட்ட நிலையிலே மாற்று ரத்தம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அதுபோன்ற நேரங்களிலே எல்லோருடைய ரத்தத்தையும் செலுத்தி விட முடியாது. சம்பந்தப்பட்டவரின் ரத்தம் எந்த வகை என்பதை அறிந்தே அவருக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது. ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள அக்குளுடினோஜன் என்னும் பொருளை பொறுத்து ரத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

ஏ பிரிவு ரத்த நோயாளிக்கு ஏ மற்றும் ஓ பிரிவு ரத்த வகைகளை செலுத்தலாம்.

பி பிரிவு ரத்தவகைக்கு பி மற்றும் ஓ பிரிவு ரத்தம் ஏற்று கொள்ளக்கூடியது. ஏபி பிரிவிற்கு எல்லா வகை ரத்தப்பிரிவையும் செலுத்தலாம். ஓ பிரிவு ரத்த பிரிவினர்க்கு ஓ வகை ரத்தம் மட்டுமே சேரும். இதனால் ஓ பிரிவு ரத்தமுள்ளவர்களை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய ரத்தவகை உடையவர்கள் என்றும் (யுனிவர்சல் டோனர்) என்றும், ஏபி பிரிவினர்க்கு அனைவரிடம் இருந்தும் பெற்று கொள்ளக்கூடிய ரத்தவகை உடையவர்கள் என்றும் கூறுவர்.

* நோயாளிகளை மருத்துவர்கள் இழிவாக பேசக்கூடாது

ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் தான்பெறும் சிகிச்சையினால் தனக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள உரிமையுள்ளது. எவ்வித சூழ்நிலையிலும் நோயுற்றவர்களை தாக்கவோ, காயப்படுத்துவதோ, இழிவான சொற்களால் புண்படுத்திப் பேசவோ கூடாது. நோயின் காரணமாக நோயுற்றவர் வேதனைப்படும் போது அவரை மோசமான வார்த்தைகளால் மருத்துவமனையின் ஊழியர்கள் புண்படச் செய்வது ஏற்க முடியாது.

நோயாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டே மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும். தீ,வெள்ளம், அசுத்தமான தண்ணீர், மின்சாரக்கசிவு, தாவரக்கழிவுகள் முதலியவற்றால் ஆபத்துவராமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் மருத்துவமனைகள் கட்ட வேண்டும். தீப்பிடித்தால் எளிதாக தப்ப தகுந்த வழிகளை, மருத்துவமனைகள் கட்டும்போதே செய்ய வேண்டும். நோயாளிகளின் ரகசியங்களைக் காக்கும் கடமை மருத்துவமனைக்கு உண்டு. அவர்களுடைய உடல்நிலை, நோய், தனிப்பட்ட விபரங்கள் மருத்துவமனைகளால் ரகசியாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பு உண்டு. எனவே நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் தோன்றும் போது அரசாங்கத்தின் மருத்துவத்துறைக்கு அறிவிக்க வேண்டும்.சிகிச்சையை மறுக்கவும், மாற்றுச்சிகிச்சையை விரும்பவும், மருத்துவமனையை விட்டு வெளியேறவும் நோயாளிகளுக்கு உரிமை உண்டு. நோயாளியுடைய மனோநிலை குழப்பத்தில் இருந்தால் அவரது நெருங்கிய உறவினரை முடிவு எடுக்கச் சொல்லலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நோயாளிகள் நலனிற்காக வகுக்கப்பட்டுள்ளன.

* மனிதனின் அசைவிற்கும், இடம் பெயர்விற்கும் உதவும் எலும்புகள்

விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் கடினமான உறுப்பு எலும்பு ஆகும். இது உள்உறுப்புகளுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன் உடலைத் தாங்குவதற்கும், நகர்விற்கும் உதவுகின்றன. எலும்புதான் நம்முடைய அசைவுகளுக்கும் காரணமாக விளங்குகின்றன. முகுதுத்தண்டு இருப்பதாலே நிமிர்ந்து நிற்க முடிகிறது. அமர முடிகிறது எழமுடிகிறது எலும்புமட்டும் இல்லாமல் இருந்தால் தோல்போர்த்திய நம்உடல் நிற்க இயலாமல் தரையில் குவிந்து விழும். விரல்களை மடக்க, கைகளை வீச, உடலுக்கு ஒருவடிவைத்தருவதில் இந்த எலும்புகள் பின்னணி வகிக்கின்றன.

இவை எடை குறைந்தவையாகவும், உறுதித்தன்மையாகவும் இருக்கின்றன. எலும்புத்திசுக்கள் தேன்கூட்டு அமைப்பைப்போன்று முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத்தன்மையைக் கொடுக்கின்றன. எலும்பில் 50சதவீதம் நீரும், 33சதவீதம் உப்புகளும், 17 சதவீதம் மற்றபொருட்களும் உள்ளன எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்து போகும் கரிமப்பொருட்களும் உள்ளன. நமது உடல் நலனிற்கு வேண்டிய கால்சியம் எனும் ரசாயனப் பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.

எலும்புகள் பொருந்தியிருக்கும் இடம் மூட்டு எனப்படும். அசையும், அசையாதமூட்டு என்று இது வகைப்படும். அசையும் மூட்டுக்கள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்வோ ஏற்படாமல் இருக்க எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய வழுவழுப்பான திரவம் சுரக்கும்.

பிறக்கும் போது மனிதனுக்கு 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும் இருப்பினும்முழுவளர்ச்சி அடையும் போது ஒருங்கிணைக்கப்பட்டு 206 எலும்புகளாக குறைந்துவிடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: