கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யாததால் மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்கின்றனர்: சந்திரபாபு நாயுடு

அமராவதி: கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யாததால் மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்கின்றனர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாவட்டங்களுக்கான சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. அம்மாநில முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் 50,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இதேபோல் அக்கட்சியின் முன்னணி வேட்பாளர்கள் பலரும் வெற்றியை நெருங்கியுள்ளனர். இந்நிலையில், தெலுங்கானாவில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தெலுங்கானா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தெலுங்குதேசம் கட்சி மதிக்கிறது என கூறியுள்ள அவர், 5 மாநிலங்களிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யாததால் மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்கின்றனர். பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க 5 மாநில தேர்தல் முடிவுகள் வழிவகை செய்யும் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: