புதுச்சேரியில் 8 எம்.எல்.ஏக்களின் இரட்டை பதவி விவகாரம்: நேரில் ஆஜர் ஆக தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில்  இரட்டை ஆதாயம் பெரும் பதவிகளை கொண்டுள்ள 8 எம்.எல்.ஏக்கள் வருகிற 27ம் தேதி ஆஜர் ஆகி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், குடியரசுத் தலைவருக்கு புகார் மனு அளித்திருந்தார். மேலும் அவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, வாரியத் தலைவர் உள்ளிட்ட பிற பதவிகளை வகிக்கும் புதுச்சேரியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓம்சக்தி சேகர், 8 எம்.எல்.ஏக்கள் அளித்த விளக்கம் ஏற்கும் படியாக இல்லை என்றும், இதனால் 27ம் தேதி அவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். விரைவில் இரட்டை ஆதாயம் பெற்ற 8 எம்.எல்.ஏக்களும் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்றும் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: