சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2 (குரூப் 2ஏ) (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான தேர்வை நடத்தியது.
இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மொத்தம் 6836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 6171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அவர்களின் மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தனர் இதில் 2229 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது.