வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே இடையூறாக இருந்த நிழற்கூடம் இடித்து அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே இடையூறாக இருந்த நிழற்கூடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரே பல லட்சங்கள் செலவில் மாநகராட்சி வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டிட பணிகள் முடிந்துள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு கடைகள் ஏலம் விடப்படள்ளது. இதற்கிடையில் இந்த வணிக வளாகத்திற்கு செல்ல இடையூறாக இருந்த பயணிகள் நிழற்கூடம் இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் நேற்று நிழற்கூடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து அகற்றினர். மேலும் பொதுமக்கள் பார்வைப்படும் வகையில் அந்த பகுதி முழுவதும் சீர்செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்தவுடன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே இடையூறாக இருந்த நிழற்கூடம் இடித்து அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: