வேதாரண்யத்தில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி

 

வேதாரண்யம், அக்.22: வேதாரண்யத்தில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீரை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக வடிய வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் கன மழையின் காரணமாக கத்தரிப்புலம் சாலையில் அவரிக்காடு கடைத்தெருவில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டனர்.

இதுகுறித்து நேற்றுமுன்தினம் தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் மதன் அறிவுரைகளின் படி சாலை ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் சாலை பணியாளர்கள் உடனடியாக அவரிக்காடு பகுதிக்கு சென்று பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையின் ஓரத்தில் சிறு வடிகால் வெட்டி தேங்கிய மழைநீரை வடிய வைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் பாராட்டினார்.

 

The post வேதாரண்யத்தில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி appeared first on Dinakaran.

Related Stories: