விவசாய குடும்பங்களுக்கு ரூ.16,000 கோடி விடுவிப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: நாடு முழுவதும் விவசாய குடும்பங்களுக்கு ரூ. 16,000 கோடி நேரடி பணப் பரிவர்த்தனை மூலமான தொகையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் வேளாண்மை அமைச்சகமும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கவுரவ மாநாடு – 2022’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 12வது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவர்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமர் மோடி விடுவித்தார். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. கடந்த 2019ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒன்றிய ரசாயன உரத்துறை அமைச்சர் பகவந்த் குபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

The post விவசாய குடும்பங்களுக்கு ரூ.16,000 கோடி விடுவிப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: