விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலன் தேசிய ஆணைய தலைவர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசுகையில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அதில் அனைத்து தூய்மை பணியாளர்களும் தவறாமல் பதிவு செய்து, புதுப்பித்து வரவேண்டும். வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தவறாமல் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வு கூட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சுகாதாரம் சார்ந்த பொருட்கள், குடும்பநல நிதி பிடித்தம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களிடம் கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்யப்படுவது, இஎஸ்ஐ அட்டை வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஆய்வு செய்தார். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்தினார். முன்னதாக விருதுநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு கூட்டத்தில் எஸ்பி னிவாச பெருமாள், டிஆர்ஓ ரவிக்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, திட்ட இயக்குநர் தண்டபாணி உள்பட அனைத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலன் தேசிய ஆணைய தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: