விராலிமலையில் கலைஞர் நூற்றாண்டு விழா புத்தக கண்காட்சி நிறைவு

விராலிமலை: விராலிமலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 நாட்கள் நடைபெற்ற 2ம் ஆண்டு புத்தக கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் நிகழாண்டு நூல் வாசிப்பாளர்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டியதால் விற்பனை அதிகரித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். விராலிமலையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக விராலிமலை கிளை நூலகம் இணைந்து கடந்த 10 நாட்களாக நடத்திய 2ம் ஆண்டு புத்தக கண்காட்சி அம்மன் கோயில் வீதி இசைவேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சி தொடங்கிய நாள் முதல் பள்ளி மாணவர்கள், நூல் வாசிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இக்கண்காட்சியில் இலக்கியங்கள், கதைகள், கட்டுரைகள், திரவிட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்பு புத்தகங்கள், சமையல் குறிப்பு, ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. புத்தக வாசிப்பு குறித்து தமிழக அரசு ப்லவேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நிகழாண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக அளவு புத்தகங்கள் விற்று தீர்ந்ததாக விற்பனையாளர்கள் கூறினார்.

The post விராலிமலையில் கலைஞர் நூற்றாண்டு விழா புத்தக கண்காட்சி நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: