வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்வு: ஜூன் 28ம் தேதி கருப்பு தினம் அறிவிப்பு: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 28ம் தேதி கருப்பு தினமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் தமிழக தலைவர் முருகன் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு நேற்று இணையதளம் வாயிலாக தமிழகத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், உச்சபட்ச டீசல் விலை உயர்வு, நிதி நிறுவனங்களின் அடாவடி வசூல் அச்சுறுத்தல், இன்சூரன்ஸ், சுங்கசாவடி முறைகேடுகள், மோட்டார் நலவாரியம் மற்றும் இதர நிலுவையிலுள்ள கோரிக்கைகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இதில், ஜூன் 28ம் தேதி நாடு தழுவிய கருப்பு தினத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்டோ கால் டாக்ஸி சுற்றுலா வாகனம் குடிநீர், பால், காய்கறிகள் டிரைலர் லாரி, டேங்கர் லாரி, மணல் லாரி என அனைத்து வகையான வாகன உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பங்கேற்று மற்றும் பொது மக்களையும் இணைத்து மிக எழுச்சியோடு ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை மணி அடிப்பது என முடிவு செய்திருக்கிறோம். மேலும், தமிழகத்தில் எங்களுக்கு ஒவ்வொரு தினம் கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். எங்களது வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறும் வரையும் தொடர்ந்து எங்களது வாகனங்களை கருப்பு கொடியுடன் மற்றும் கருப்பு போஸ்டருடன்  இயக்க இருக்கிறோம். …

The post வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்வு: ஜூன் 28ம் தேதி கருப்பு தினம் அறிவிப்பு: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: