ரூ.3 கோடி உதவித்தொகையுடன் சிகாகோ பல்கலை.யில் படிப்பு; சாதித்த 17 வயது ஈரோடு மாணவி

ஈரோடு: ஈரோடு மாவட்டதைச் சேர்ந்த மாணவிக்கு அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற சிக்காகோ பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் சேர அனுமதி கிடைத்துள்ளது. சென்னிமலை அடுத்த காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன்- சுகன்யா தம்பதியினரின் மகள் ஸ்வேகா. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் ஸ்வேகாவுக்கு மூன்று கோடி ரூபாய் உதவித்தொகையுடன் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படிக்கச் அனுமதி கிடைத்திருக்கிறது. டெக்ஸ்டெரிட்டி குளோபல் பள்ளி நிர்வாகி சரத் என்பவரின் மூலம்  சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்ட மாணவி 10 ஆம்  வகுப்பு முதலே அவரிடம் ஆன்லைனில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அதன் பயனாக ஸ்வேகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உழவுத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த தங்கள் மகள் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சேர இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பெற்றோர் பெருமைபடுகின்றனர்.       …

The post ரூ.3 கோடி உதவித்தொகையுடன் சிகாகோ பல்கலை.யில் படிப்பு; சாதித்த 17 வயது ஈரோடு மாணவி appeared first on Dinakaran.

Related Stories: