யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வேப்பனஹள்ளி கே.பி.முனுசாமி (அதிமுக) சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேசும்போது, ‘‘வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். அதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘கடந்த 9-4-2022 அன்று காலை 5 மணிக்கு திம்மப்ப நாயக்கர்(64)  என்பவர் யானை தாக்கி இறந்திருக்கிறார். வன உயிரினம் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துக்கு உடனடியாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.4.5 லட்சம் விரைவில் வழங்கப்படும்’’ என்றார். …

The post யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: