மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

மேலூர், ஜூலை 11: மேலூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். தொழிலாளர்களை பாதிக்கின்ற, தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட கோரியும், பொது துறைகளை, தனியார் மயமாக்கின்ற தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிட வேண்டும், ஆன்லைன் அபதாரத்தை கைவிட கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பை உத்திரவாத படுத்த கோரியும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்கிட கோரியும், இபிஎப் ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச பென்சனாக ரூ.9000 வழங்கிடு என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகிகள் கௌரி, பொன் கிருஷ்ணன், பிச்சை ராஜன், காளிராஜன், சௌந்தர பாண்டியன், பாண்டி, தாலுகா செயலாளர் கண்ணன், மணவாளன், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: