மேடவாக்கம் அரசு பள்ளியில் 248 மாணவர்களுக்கு சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார்

வேளச்சேரி, ஜன.4: மேடவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலரும், மேடவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ரவி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், 2வது வார்டு கவுன்சிலருமான போஸ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 136 மாணவிகள், 112 மாணவர்கள் என மொத்தம் 248 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜன், ஒன்றிய கவுன்சிலர் கல்பனா சுரேஷ், மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேடவாக்கம் அரசு பள்ளியில் 248 மாணவர்களுக்கு சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: