முஞ்சிறை அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

 

கருங்கல், அக்.14: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் அரசின் இலவச சைக்கிள்கள், பேக், புத்தகம், சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மேரி வசந்தி தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்கள், பேக், புத்தகம், சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், முஞ்சிறை ஊராட்சி தலைவர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முஞ்சிறை அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: