மீன்பிடி வலைகள் எரிக்கப்படுவதையடுத்து மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்: 33 மீனவ கிராம நிர்வாகிகள் பங்கேற்பு

 

பொன்னேரி, ஜூலை 8: பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள பேரிடர் மீட்பு மைய கட்டிடத்தில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பசியாவரம் கிராமத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சுமார் 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், நேரில் சென்று ஆய்வு செய்து மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைதொடர்ந்து, மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள பேரிடர் மீட்பு மைய கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் ஆவடி காவல் சரகர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர் ராஜா ராபர்ட் முன்னிலையில், திருப்பாலைவனம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு, பழவேற்காடு சுற்றியுள்ள 33 மீனவ கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், அடிக்கடி மீன்பிடி வலைகளை எரித்துவிட்டு செல்லும் மர்ம நபர்களை கண்டுபிடிக்கவும், அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவது குறித்தும் மேலும் திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவேற்காடு பகுதி முழுவதும் ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலத்திலிருந்தும் வெளியூர்களில் இருந்தும் பழவேற்காடு பகுதிக்கு வாலிபர்கள், காதல் ஜோடிகள், மது பிரியர்கள் வந்து செல்வதால் அங்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டம் இருக்கிறதா,

அப்படி தகவல் தெரிந்தால் உடனடியாக திருப்பாலைவனம் காவல்நிலையத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கும் காவல்துறைக்கும் அதிக தொடர்பு உண்டு என காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கு மீனவ நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதில், மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலோர காவல் படை உதவியாளர் சபாபதி நன்றி கூறினார்.

The post மீன்பிடி வலைகள் எரிக்கப்படுவதையடுத்து மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்: 33 மீனவ கிராம நிர்வாகிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: