மிதக்கும் நகரம் என அழைக்கப்படும் வெனிஸில் பாரம்பரிய படகு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு..!!

வெனிஸ்: இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் 48வது ஆண்டாக நடைபெற்ற படகு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். கால்வாய்களின் நகரம் அல்லது மிதக்கும் நகரம் என்ற பெயரில் அழைக்கப்படும் வெனிஸ் நகரம் இத்தாலியின் மிக அழகிய நகரங்களின் ஒன்றாக உள்ளது. அங்கு ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெற்று வரும் படகு திருவிழா நடப்பு ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இதில் பங்கேற்கும் படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பந்தயமாக இல்லாமல் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக நடைபெறும் இந்த திருவிழா வழக்கம் போல களைகட்டியது. இதேபோல சீனாவின் சாங்சுங் மாகாணத்தில் டிராகன் படகு பந்தயம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பாரம்பரிய சீன கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் இந்த போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் 7 அணிகள் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் படகுகள் நீரை கிழித்துக்கொண்டு முன்னேறி சென்றன. டிராகன் படகு திருவிழாவையொட்டி மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். …

The post மிதக்கும் நகரம் என அழைக்கப்படும் வெனிஸில் பாரம்பரிய படகு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: