மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு 12ம் தேதி மாறுதல் கவுன்சலிங்

சென்னை: பள்ளிக் கல்விப் பணியில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடத்தில் உள்ள 124  அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் 12ம் தேதி நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் பணி வகுப்பு 4ன் கீழ் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) மற்றும் அதற்கு நிகரான பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12ம் தேதி மாலை 5 மணிக்கு மாறுதல் கவுன்சலிங் நடக்க உள்ளது. இதன்படி 120 மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககம், தொடக்க கல்வித்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பள்ளிக் கல்வி ஆகிய துறைகளில் பணியாற்றும் 4 உதவி இயக்குநர்கள் என மொத்தம் 124 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட உள்ளது. கவுன்சலிங் நடக்கும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக கருதப்படும். இந்த அலுவலர்கள் தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் (சீனியாரிட்டி) மாறுதல் கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட பணியிடங்கள் அனைத்தும் காலிப் பணியிடங்களாக கருதப்படும் என்பதால், சீனியாரிட்டி பட்டியலில் முதலில் உள்ளவருக்கு விரும்பிய இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது….

The post மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு 12ம் தேதி மாறுதல் கவுன்சலிங் appeared first on Dinakaran.

Related Stories: