மாவட்டத்தில் இன்று 12,802 பேர் பிளஸ் 2 எழுதுகின்றனர்: 54 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது

 

தேனி, மார்ச் 1: தமிழ்நாட்டில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. தேனி மாவட்டத்தில் மொத்தம் 54 தேர்வு மையங்களில் 12,802 பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று துவங்க உள்ளன. இன்று மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு கள்ளர் மேல்நிலை பள்ளிகள், ஆதி திராவிட நல மேல்நிலை பள்ளிகள், நகராட்சி மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளிகள் மற்றும் சுயநிதி மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 143 மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 802 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் 6 ஆயிரத்து 151 பேரும், மாணவிகள் 6 ஆயிரத்து 651 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 299 தனி தேர்வர்களும் பிளஸ் டூ பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

இதற்காக மாவட்ட முழுவதும் 54 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழுவும், சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் இன்று 12,802 பேர் பிளஸ் 2 எழுதுகின்றனர்: 54 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: