மாதாகோயில் தேர்திருவிழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற வான தூதர்களின் அன்னை ஆலயம் என்கிற மாதா கோயிலின் 109ஆம் ஆண்டு தேர் திருவிழாவை ஒட்டி கொடியேற்ற நிகழ்வு கடந்த மார்ச்-6ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு ஆரம்பாக்கம் மாதாகோவில் பாதிரியார் பாப்பையா தலைமை தாங்கினார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் மறைமாவட்ட முதன்மை குரு பாதிரியார் டி.அருள்ராஜ் பங்கேற்று கொடியேற்றத்தை துவக்கி வைத்து சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார். இதனை தொடர்ந்து 8 நாட்கள் வெள்ளிக்கிழமை வரை ஆரம்பாக்கம் மாதாகோவிலில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சனிக்கிழமை சாந்தோம் மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் பாதிரியார் ஜோஆண்ரூ தலைமையில் பாதிரியார் ராக் சின்னப்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்று தேர்திருவிழாவை ஒட்டி சிறப்பு பிரார்த்தனையை நடத்தினர். தொடர்ந்து 2 சிறிய தேர்கள் மற்றும் படகு வடிவில் அமைந்த தேரில் அலங்கரிக்கப்பட்ட மாதா திருவுருவ சிலையில் தேர்புறப்பாடு வழிபாடு நடைபெற்றது. அப்போது வழியெங்கும் பல்வேறு மத பக்தர்கள் மாதாவை வேண்டி வணங்கி மாதாவின் அருள் பெற்று சென்றனர். இந்த தேர் திருவிழாவில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தொடர்ந்து ஞாயிறன்று கொடியிறக்க நிகழ்வு சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற்றது. இந்த 10நாள் தேர்திருவிழா ஏற்பாடுகளை ஆரம்பாக்கம் மாதா கோவில் பாதிரியார் பாப்பையா தலைமையில் புனித அன்னாள் மட சகோதரிகள் மற்றும் திருவிழா குழுவினர் சிறப்பாக நடத்தினர்….

The post மாதாகோயில் தேர்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: