மயிலாடுதுறையில் திமுக மாவட்ட வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறை, ஜூலை 6: ஒன்றிய அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை மாற்றுவதுடன் அதில் உள்ள சட்டப்பிரிவுகளையும் மாற்றுவதை கண்டித்தும், அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடாது, அவற்றை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒருவார கோர்ட் புறக்கணிப்பு செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி கீழமை நீதிமன்ற வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது. அதன்படி மயிலாடுதுறையில் கடந்த 1ம்தேதி முதல் கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திமுக மாவட்ட வக்கீல் அணி சார்பில் இந்திய சட்டங்களை ஹிந்தி, சமஸ்கிரத பெயராக மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்தும், சட்ட திருத்தங்களை உடன் திரும்பப்பெற வலியுறுத்தி மயிலாடுதுறை கோர்ட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். அரசு வக்கீல்கள் ராம சேயோன், பழனி, அருள்தாஸ், மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் கலைஞர், செயலர் பிரபு, சங்கரநாராயணன், புகழரசன் உட்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

The post மயிலாடுதுறையில் திமுக மாவட்ட வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: