சீர்காழி அருகே சட்டநாதபுரம் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம்

 

சீர்காழி,அக்.5: சீர்காழி அருகே சட்டநாதபுரம் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலமாக பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பல் மருத்துவர் டாக்டர் ஜெகதீசன் மற்றும் சஹானா ஆகியோர் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு பல் தொடர்பான சிகிச்சை மற்றும் பற்களை எவ்வாறு பாது காத்து கொள்ளுதல் போன்ற கருத்துக்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அமுதா நடராஜன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து பேசினார். பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் துணை முதல்வர் பார்கவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சசிகுமார் செய்திருந்தார்.

The post சீர்காழி அருகே சட்டநாதபுரம் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: