கூவத்தூரில் மரக்கன்று நடும் விழா

 

ஜெயங்கொண்டம் அக்.5: கூவத்தூரில் அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மரம் நடும் விழாநடைபெற்றது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கூவத்தூர் கால்நடை மருந்தகத்தில் மரம் நடும் விழா கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி உதவி இயக்குனர் ரமேஷ் ஆகியோரது அறிவுறுத்தலின் நடைபெற்றது.

கால்நடை உதவி மருத்துவர் செந்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கால்நடை மருந்தகங்களுக்கு சிகிச்சைக்காக வரும் கால்நடைகளுக்கு உணவளிக்க மற்றும் நிழல் தர ஏதுவாக அகத்தி சுபாபுல் கல்யாண முருங்கை வேம்பு உள்ளிட்ட தீவன மரங்கள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் கூவத்தூர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

The post கூவத்தூரில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: