திருச்சி, மாநகராட்சியில் 13 வார்டுகளுக்கு மண் அள்ளும் இயந்திரம் வழங்கல்

 

தில்லைநகர், அக். 5: திருச்சி, ஐந்தாவது மண்டலத்திற்குட்பட்ட 13 வார்டுகளுக்கும் மண் அள்ளும் இயந்திரம் வழங்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி, ஐந்தாவது மண்டல குழு அலுவலக பகுதிக்குட்பட்ட 13 வார்டுகளுக்கும் மண் அள்ளும் இயந்திரத்தை அதன் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் ஒவ்வொரு வார்டுகளுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்வில், உதவி ஆணையர் சீனு கிருஷ்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கேஎஸ் நாகராஜன், முத்துக்குமார், க.சுரேஷ்குமார், பைஸ் அகமது, கமால் முஸ்தபா,விஜயா ஜெயராஜ், எஸ் வி ஆர் விஜயலட்சுமி, பங்கஜம் மதிவாணன், சோபியா விமலா ராணி, நாகலட்சுமி நம்பி. சுகாதார அலுவலர் இளங்கோவன். மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post திருச்சி, மாநகராட்சியில் 13 வார்டுகளுக்கு மண் அள்ளும் இயந்திரம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: