அமெரிக்காவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட 242-வது சுதந்திர தினம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 242-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பங்கேற்றனர். பின்னர் சுதந்திரத்தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட வாணவேடிக்கையை டொனால்டு டிரம்ப் கண்டு ரசித்தார். வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டின. ஏராளமான மக்கள் வாணவேடிக்கைகளை கண்டு மகிழ்ந்தனர்.

கடந்த 1776-ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. உலகின் பெரும்பான்மையான நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து சூரியன் மறையாத சாம்ராஜ்யம் எனப் பெயர் எடுத்த பிரிட்டனின் கட்டுப்பாட்டில் தான் அமெரிக்காவும் இருந்தது.  அமெரிக்காவில் மாகாணங்கள் தங்களை சுதந்திரமானதாக அறிவித்துக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவாக உருவாகின. ஆனாலும் அமெரிக்க சுதந்திரத்திற்கான புரட்சி 1783ம் ஆண்டு வரை நீடித்தது

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: