மஞ்சளாறு அணையில் உபரிநீர் வெளியேற்றம்-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தேவதானப்பட்டிக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் ஆயக்கட்டு பாசன வசதி பெறுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணைக்கு 90 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதனால், அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 90 கனஅடி நீரை, அப்படியே உபரிநீராக நேற்று முதல் வெளியேற்றப்படுகிறது. இதனால், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, சிவஞானபுரம் உள்ளிட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

The post மஞ்சளாறு அணையில் உபரிநீர் வெளியேற்றம்-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: