போலி தரவுகள் மூலம் திரும்ப பெற்றவர்கள் மீது நடவடிக்கை: புதுக்கோட்டை விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை

 

புதுக்கோட்டை. டிச.2: போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்ைடயில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருமான வரித்துறை சார்பாக வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டம் வருமான வரி கூடுதல் ஆணையர் நித்யா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கருவூல அதிகாரி ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

இதில் தஞ்சாவூர் வருமான வரி உதவி ஆணையர் சீனிவாசன், வருமான வரி அதிகாரிகள் வில்விஜயன், ராஜசேகர், சுரேஷ்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்திற்குட்பட்ட அதிகாரிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருமான வரி பிடித்தம் தொடர்பாகவும், போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப்பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு தீர்வாக திருத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவம் தாக்கல் செய்து தவறை திருத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது. இதனை அனைத்து பணம் வரைதல் மற்றும் வழங்குதல் அதிகாரிகள் தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

The post போலி தரவுகள் மூலம் திரும்ப பெற்றவர்கள் மீது நடவடிக்கை: புதுக்கோட்டை விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: