போதை, மது கொடுத்து சிறுமிகளை வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்த டாக்டருக்கு 22 ஆண்டு சிறை: பாலியல் தேவைக்காக மாதம் ரூ.1.5 லட்சம் செலவு

ஓஹியோ: அமெரிக்காவின் வடக்கு ஓஹியோ மாவட்ட நீதிபதி பமீலா பார்கர், அவசர சிகிச்சை பிரிவு முன்னாள் மருத்துவரான ஆல்பர்ட் அயட்-டாஸ் (53) என்பவருக்கு, 12 முதல் 18 வயதுடைய 6 இளம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50,000 டாலர் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதுகுறித்து ஆஷ்லேண்ட் கவுண்டி வழக்கறிஞர் கிறிஸ் துன்னெல் கூறுகையில், ‘அவசர சிகிச்சை பிரிவு முன்னாள் மருத்துவரான ஆல்பர்ட் அயட்-டாஸ் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் கடந்த 2019ம் ஆண்டு கோடை காலத்தில் வௌிச்சத்திற்கு வந்தன. இவர், யங்ஸ்டவுன் மற்றும் ஆஷ்லேண்ட் போன்ற இடங்களில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக பணியாற்றிய போது 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆஷ்லேண்ட் காவல்துறையினர், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆல்பர்ட் அயட் – டாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபெடரல் வக்கீல்கள் தாக்கல் செய்த மனுவில், ஜூன் 2019ல் சிறுமி ஒருவரை தொடர்பு கொண்ட அயட்-டாஸ், அவரை சிறிய அளவிலான பார்களுக்கு அழைத்து சென்று, ஆபாச புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர், சிறுமிகளாக தேடிப்பிடித்து தனது செக்ஸ் தேவைக்கு ஓட்டல்களுக்கு அழைத்து சென்றுள்ளார். ஒரு முறை செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பத்தில் 100 டாலர் வரை செலவு செய்துள்ளார். இவரது வலையில் சிக்கிய சிறுமிகளை அழைத்துக்கொண்டு ஆஷ்லேண்ட், ஃபேர்லான் மற்றும் கொலம்பஸ் போன்ற நகரங்களுக்கு அழைத்து செல்வார். அங்குள்ள ஓட்டல்களில் தங்கவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரது வலையில் சிக்கிய சிறுமிகளுக்கு ஒவ்வொரு முறையும் 500 டாலர் வரை பணம் கொடுத்துள்ளார். மேலும், அவர்களுக்கு கஞ்சா மற்றும் மதுபானங்களை கொடுத்துள்ளார். அவர்களுக்கான விலை உயர்ந்த உள்ளாடை மற்றும் செக்ஸ் பொம்மைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். 12 வயதான சிறுமி ஒருவரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள 200 டாலர் ரொக்கமாக கொடுத்ததாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் அவரது காரில் வைத்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவர் தனது செக்ஸ் வெறித்தனத்தால், தனது குடும்பத்தினருக்கு அவமானம் ஏற்படுமோ? என்று ஒவ்வொரு முறையும் நினைத்ததாக தெரிவித்துள்ளார். சிறுமிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக ஒரு மாதத்திற்கு 2,000 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.1.46 லட்சம்) ஒதுக்கி டாக்டர் ஆல்பர்ட் அயட் – டாஸ் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post போதை, மது கொடுத்து சிறுமிகளை வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்த டாக்டருக்கு 22 ஆண்டு சிறை: பாலியல் தேவைக்காக மாதம் ரூ.1.5 லட்சம் செலவு appeared first on Dinakaran.

Related Stories: