பொக்காபுரம் திருவிழாவில் சிறப்பு பேருந்துகளை சிறப்பாக இயக்கிய ஓட்டுனர் நடத்துனர்களுக்கு பாராட்டு

கூடலூர், ஏப்.12: கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளை சிறப்பாக இயக்கிய ஓட்டுனர் நடத்துநர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நேற்று கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக கிளை வளாகத்தில் நடைபெற்றது. வணிக மேலாளர் வாசுதேவன், தொழில்நுட்ப மேலாளர் சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் வசித்தனர். கோவை மண்டல பொது மேலாளர் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஓட்டுநர்கள், நடத்துனர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிய போதும் பொதுமக்கள், பயணிகளுக்கான சேவையை சிறப்பாக செய்து வருகின்றது.

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் பேருந்து பராமரிப்பு சிறப்பாக உள்ளது. வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை அதன் ஓட்டுநர் நடத்துனர்கள் தொடர்ந்து சிறப்பாக பராமரிப்பதால் பேருந்துகள் எப்போதும் புதிய பேருந்துகள் போலவே காட்சியளிக்கின்றன. இது மற்ற போக்குவரத்து கிளைகளில் பாராட்டை பெற்று வருகிறது. ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் குறையும் வகையில் பணியாற்ற வேண்டும். பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பேருந்துகளில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு லட்ச ரூபாய் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக விபத்துகள், இடைநிற்றல் இன்றி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் செயல்பாடுகள் பாராட்த் தக்கதாக அமைந்துள்ளது. வரும் கோடை விழா காலங்களிலும் இதுபோன்ற சிறப்பாக பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பொக்காபுரம் கோவில் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றி அதிக வசூல் செய்த ஓட்டுனர் ஜெகநாதன் நடத்துனர் சின்னசாமி உள்ளிட்ட 18 பேரை பாராட்டி கேடயங்கள் வழங்கினார். பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தொமுச மண்டல பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், துணைப் பொதுச் செயலாளர் ரவி, சிவக்குமார், மாரிமுத்து, மது, சதீஷ் மற்றும் பாராட்டு பெற்ற ஓட்டுநர் நடத்தினார்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிளைச்செயலாளர் உதயசூரியன் நன்றி கூறினார்.

The post பொக்காபுரம் திருவிழாவில் சிறப்பு பேருந்துகளை சிறப்பாக இயக்கிய ஓட்டுனர் நடத்துனர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: