கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டு மாடுகள்

 

கோத்தகிரி, ஜூலை 5: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில சமயங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்ட பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வரத்தொடங்கி உள்ளது. மேலும் தேயிலை தோட்டங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்டங்களில் பணிக்கு செல்லவும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பொதுமக்களை துரத்துவது, தாக்குவது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் நேற்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு மாடு ஒன்று அங்கும் இங்குமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தே வாகனங்களை இயக்கி சென்றனர். எனவே காட்டு மாடுகள் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டு மாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: