பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் 8 பேர் போட்டியின்றி தேர்வு

பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 8-மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில் 8 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட திட்டஇயக்குநர் தேர்வு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். பெரம்பலூர் மாவட்டத்தில் 8 உறுப்பினர் பதவியிடங்களை கொண்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடை பெறுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து. அத ற்கான காலஅட்டவணை யையும் அரசாணையில் வெளியிட்டிருந்தது.

பெரம் பலூர் மாவட்டத்திற்கான இத்தேர்தலில் மாவட்ட ஊ ராட்சி உறுப்பினர்களிலிருந்து 6 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 2 உறுப்பினர்களும் மாவட்டத் திட்டக்குழு உறுப் பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்க ப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சி லர்கள் 8பேர், நகராட்சி கவு ன்சிலர்கள் 21பேர், 4 பேரூ ராட்சிகளின் கவுன்சிலர் கள் 60பேர் என மொத்தம் 89 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்கான வேட்பு மனுக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 2 வது தளத்திலுள் ள மாவட்ட ஊராட்சி அலுவ லகக் கூட்ட அரங்கில், தேர் தல்நடத்தும் அதிகாரியான, மாவட்ட ஊரக வளர்ச்சி முக மைத் திட்ட இயக்குநர் லலி தா தலைமையில், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் களான (ஊரகம்) உதவித்தி ட்ட அலுவலர் முருகன், (நக ர்ப்புறம்) கலெக்டரின் நேர் முக உதவியாளர்(சத்துண வு) சீனிவாசன் ஆகியோரால் கடந்த 7ம் தேதி தொட ங்கி மனுதாக்கல் செய்ய கடைசி நாளான 10ம் தேதி வரை பெறப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சி லர்கள் (1வதுவார்டு) டாக் டர் கருணாநிதி, (2வது வார் டு)முத்தமிழ்செல்வி மதியழ கன், (3வது வார்டு) மகாதே விஜெயபால்,(4வதுவார்டு) தழுதாழை பாஸ்கர், (5வது வார்டு) அருள்செல்வி காட் டுராசா,(6வதுவார்டு) சோமு மதியழகன் ஆகிய 6பேர்க ளும், பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர்கள் தரப்பில் (20 வது வார்டு) கவுன்சிலரான நகராட்சி துணைதலைவர் ஹரிபாஸ்கர், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் தரப்பில் பூ லாம்பாடி பேரூராட்சியின் (7வது வார்டு) கவுன்சிலரா ன பெரூராட்சி துணைத் த லைவர் செல்வலட்சுமி சே கர் என 8பதவியிடங்களுக் கு 8பேர் மட்டுமே மனுதாக் கல் செய்திருந்தனர். தொடர்ந்து கடந் த 12ம் தேதி காலை 11 மணியளவில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அ தில் மேற்கண்ட 8 பேர்களது மனுக்களும் ஏற்கப்பட்டன.

நேற்று (14ம் தேதி) மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெ ற அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் யாரும் மனுவை திரும்பப் பெறாததால் மனு தாக்கல் செய்த 8 பேர்களும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்குப் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டனர். போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட 8 பேர்களுக்கும் தேர்வு செய் யப்பட்டதற்கான சான்றிதழ் களை உதவி தேர்தல் நடத் தும் அலுவலர்களான முருகன், சீனிவாசன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நாராயணன் ஆ கியோரது முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி யான பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் தி ட்ட இயக்குநர் லலிதா வழங்கிப் பாராட்டினார். பெரம் பலூர் மாவட்டத்தில் 8 பதவி இடங்களுக்கும், உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுவிட்டதால் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு ந டைபெறாது என்பது குறிப் பிடத்தக்கது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் 8 பேர் போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: